உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடையநல்லூர் அனுமன் ஜெயந்தி டிச.19ல் ஆரம்பம்!

கடையநல்லூர் அனுமன் ஜெயந்தி டிச.19ல் ஆரம்பம்!

கடையநல்லூர் : கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமத் ஜெயந்திவிழா டிச.19 ல் துவங்குகிறது. டிச., 19 முதல் 22 வரை காலையில் ஜெபம், அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை நடக்கிறது. டிச.,23 காலை6 மணிக்கு கணபதிஹோமமும், ராம, அனுமன் மூலமந்திர ஜெப பாராயணமும், ருத்ர, நவகிரக, வித்யா, சண்டீ ஹோமங்களும் நடக்கும். தொடர்ந்து அகண்டராம ஜெப சிறப்பு வழிபாடு ஆரம்பமாகும். தினமும் மாலை 6மணிக்கு பஜனை, சொற்பொழிவு நடக்கிறது. கிருஷ்ணப்ரேமி சுவாமிகளின் ஆசியுடன் நடக்கும் இவ்விழாவில் அகில உலக ஆஞ்சநேய தாசர்கள், சத்யசாயிசேவா சமிதி, வள்ளலார் மன்றத்தினர் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !