மதுரையில் மந்திரங்களின் பொருள் தெரிந்து கூற வேண்டும் திருப்பூர் கிருஷ்ணன் பேச்சு
 மதுரை: "மந்திரங்களின் பொருள் தெரிந்து கூற வேண்டும், என, மதுரையில் காஞ்சி  சங்கர மடம், அனுஷத்தின் அனுக்கிரஹம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ் ணன் பேசினார்.
பரமாச்சார்யார் வழிகாட்டும் கை விளக்கு என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: 
சமீபகாலத்தில் நூறு ஆண்டுகள் வாழ்ந்த ஞானி காஞ்சி பரமாச்சார்யார் சந்திரசேகரசரஸ்வதி சுவாமிகள். மற்ற துறவியர் யாரும் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்ததில்லை. அவர் மக்களை பாராட்டினார், காப்பாற்றினார். 
இறை சக்தியை தன்னுள் கொண்டு அவர் வாழ்ந்ததால் ராமர், கிருஷ்ணர் போல வணங்கப்ப டுகிறார். அவரை பார்ப்பது அழகை ரசிப்பது போன்றதாகும். ஆலய பாதுகாப்பு அவரது மூச்சாக இருந்தது. வியாசர் கூற, விநாயகர் எழுதியது போல, பெரியவர் கூற  இரா.கணபதி எழுதிய தெய்வீகத்தின் குரல் என்ற நூல் அனைவராலும் பாதுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். விஷ்ணு சகஸ்ரநாமம் வீட்டை பாதுகாக்கும். மந்திர சக்தி நம்மை நல்லநிலைக்கு உயர்த்தும். 
அவற்றின் பொருள் தெரிந்து கூற வேண்டும். நல்ல காரியங்களை செய்வதை பிறரிடம் கூற கூடாது. கூறினால் அதன் பயன் இருக்காது, என்றார். இன்றும், நாளையும் (டிச., 16, 17) எழுத் தாளர் இந்திரா சவுந்திரராஜன் முறையே ஸ்ரீ மகா பெரியவா மகிமை, சுந்தரகாண்டம் என்ற தலைப்புகளில் பேசுகிறார். இன்று காலை மகன்யாஸமும், மாலை அபிஷேக ஆராதனையும் நடக்கிறது.