உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் குளங்களுக்கு நீர்வரத்து

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் குளங்களுக்கு நீர்வரத்து

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பெய்த மழை யினால் கண்மாய்கள் நிரம்பி மறுகால் விழுவதால், ஆண்டாள் கோயில் திருமுக்குளம் மற் றும் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

நகரின் மேற்கு பகுதியிலிருக்கும் மொட்டபெத்தான் கண்மாய் நிரம்பியதால் அதன் தென்பகுதி மடை வழியாக ஆண்டாள் திருமுக்குளத்திற்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த திரு முக்குளத்தின் வடக்குகரை தடுப்பு சுவர் பகுதியில் மணல்மூடைகள் அடுக்கப்பட்டு, கரைகள் அரிக்காதவாறு பாதுகாக்கப்படுகிறது. இதனால் தற்போது குறைந்தளவு நீரே விழுகிறது. கரைகள் பலப்படுத்தும் பணி முடிந்ததும் திருமுக்குளம் நிரம்பும் வகையில் நீர் தேக்கப்படும்.

இதனிடையே மம்சாபுரம் கண்மாய்கள் நிரம்பி மறுகால் விழும் தண்ணீர், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய்க்கு வரும் தண்ணீர் தற்போது மடவார்வளாகம் வைத்தியநாதசாமி கோயில் குளத்தில் விழுகிறது. தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்தால் இவ்விரு குளங்களும் நிரம்பும். எதிர்வரும் நாட்களில் மழை தொடர்ந்தால் வடமலைக்குறிச்சி கண்மாய்க்கும் நீர்வரத்து அதிகரிக்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !