கடலாடியில் கிறிஸ்துமஸ் கீத பவனி
ADDED :2876 days ago
கடலாடி:சி.எஸ்.ஐ., சர்ச் மடத்தாகுளம் சேகரத்தின் சார்பில் கடலாடி, கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை அறிவிக்கும் கீத பவனி நடந்தது.
மடத்தாகுளம் சர்ச் பாதிரியார் பால் தினகரன் தலைமை வகித்தார். பாதிரியார் மதியழகன், கடலாடி சர்ச் சபைகுரு பி.எஸ்.இஸ்ரவேல் முன்னிலை வகித்தனர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு வீடுகள் தோறும் நற்செய்திகள் வாசித்தும், பாடல்களை இசைத்தபடியும் ஏராளமானோர் வலம் வந்தனர்.