உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் மார்கழி உற்ஸவம் ஆரம்பம்

பரமக்குடியில் மார்கழி உற்ஸவம் ஆரம்பம்

பரமக்குடி:மார்கழி மகா உற்ஸவம் பரமக்குடியில் உள்ள சிவன், பெருமாள் கோயில்கள் உட் பட அனைத்து கோயில்களிலும் சனிக்கிழமை தொடங்குகிறது.

ஆண்டு தோறும் மார்கழி முதல் நாள் துவங்கி தை முதல் நாளான பொங்கல்விழா முடிய மார்கழி உற்ஸவம் அனைத்து கோயில்களிலும் காலையில்நடப்பது வழக்கம்.

இதன் படி பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில்தினமும் காலை 5:00 மணிக்கு திருப்பா வை கோஷ்டியினரால் திருப்பள்ளி எழுச்சி,ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்கள் பாடப் படும்.

தொடர்ந்து 6:00 மணிக்குமகாதீபாராதனை நடக்கும். மேலும் எமனேஸ்வரம் வரதராஜப் பெரு மாள் கோயில்,அனுமார் கோதண்டராமசாமி கோயில்களிலும் திருப்பாவை பாடப்படும்

இதேபோல் ஈஸ்வரன் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர், எமனேஸ்வரம் எமனேஸ்வர முடை யவர், நயினார்கோவில் நாகநாதசுவாமி என அனைத்துசிவன் கோயில்களிலும் மாணிக்க வாசகர் அருளிய திருவெம்பாவை பாடப்படும்.

மேலும் அனுமன்ஜெயந்தி, ஆருத்ரா தரிசனம், சொர்க்கவாசல் திறப்பு, அனைத்து ஜீவராசி களுக்கும் படியருளிய விழா, அக்காரவடிசன் வைபவம் என மாதம்முழுவதும்  விழாக்கள் நடக்கவுள்ளது. இதனால் தினமும் பெண்கள், ஆண்கள்என பக்தர்கள் கோயிலுக்கு செல்வது வழக்கம். மேலும் காலையில்எழுந்து பெண்கள் வீடுகளின் முன்மார்கழி கோலம் இடுவர். ஆகவே நகராட்சி சார்பில் தெருவிளக்குகளை பராமரிப்பதுடன், போலீசார்காலை நேரங்களில் தெருக்களில் கோலம் போடும் பெண்கள், கோயிலுக்குசெல்வோரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !