பெரியகுளத்தில் ஏகாதசி சிறப்பு பூஜை
ADDED :2878 days ago
பெரியகுளம்: பெரியகுளம் தெற்கு அக்ரஹாரம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஏகாத சியை முன்னிட்டு,கிருஷ்ணர்- ராதைக்கு சிறப்பு திருமஞ்சனம் பூஜை நடந்தது. மாலையில் நடந்த சுவாதி நட்சத்திர நிகழ்ச்சியை முன்னிட்டு குருஜிபாதுகைக்கு 108 அஷ்டோத்திர பூஜையும், துளசி பூஜை நடந்தது.
கூட்டுபிரார்த்தனையை தொடர்ந்து, அன்னதானம் நடந்தது.கிருஷ்ணசைதன்யதாஸ் பேசிய தாவது: பகவான் கண்ணன் கீதையில் தான், மாதங்களில்மார்கழியாக உள்ளதாக கூறுகிறார். இந்த மாதம் தேவர்களாலும் போற்றப்படுகிறது. பாவை நோன்புஎனும் அரிய நோன்பு இருந்து, விடியற்காலையில் நாம சங்கீர்த்தனம் செய்யும் போது அனைவருக்கும் சகலஐஸ்வர்யம் கிடைக்கும், என்றார்.