உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூரில் சாய் தரிசனம்:"சிடி வெளியீடு

திருப்பூரில் சாய் தரிசனம்:"சிடி வெளியீடு

திருப்பூர்: அவிநாசி, பைபாஸ்ரோட்டிலுள்ள ஸ்ரீ சாய்பாபா மந்திரில், "சாய் தரி சனம் என்ற "சிடி வெளி யீட்டு விழா நடந்தது.இந்த கோவிலுக்கு, சாய் தரிசனம் மற்றும் ஆரத்தி பாடலுடன் கூடிய பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா, சாய்பாபா மஹாலில் நடந்தது. விழாவுக்கு, ஸ்ரீ சாய்பாபா மந்திர் நிறுவனர் சாய் ரவி தலைமை வகித்தார். அன்னபூர்ணா குழுமங்களின் நிர்வாகி வெங்கடேஷ், பாடல் ஆசிரியர் விஷ்வா, ஒலிப்பதிவாளர் கார்த்திக், இசை அமைப்பாளர் தனுஷ் உட்பட பலர் பங்கேற் றனர்.மயில்சாமி, "சிடியை வெளியிட, வக்கீல் சுந்தரவடிவேல் பெற்று கொண்டார். அவிநாசி சாய்பாபா குறித்த, ஆறு ஆரத்தி பாடல்களை, நித்யஸ்ரீ, உன்னிமேனன், பிரசன்னா, திப்பு, ஹரிணி, விஷ்வா ஆகியோர் பாடியுள்ளனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !