அம்மாபேட்டை செம்படாம்பாளையத்தில் சந்தனக்கூடு திருவிழா
ADDED :2883 days ago
அம்மாபேட்டை: சித்தார் அருகே, சந்தனக்கூடு விழா நடந்தது. பவானி, சித்தார் அருகிலுள்ள செம்படாம் பாளையம் கிராமத்தில் இஸ்லாமியர்களின் புனித கோவில் உள்ளது. இங்கு ஜங்கல்பீர் ஷக்தாவுத் என்பவர் சமாதி உள்ளது. இங்கு சந்தனக்கூடு விழா, கடந்த மாதம், 11ல் தொடங்கியது. இந்நிலையில் சந்தனக்கூடு விழா, நடந்தது. ஜம் ஜம் என்ற புனித நீருடன், மூன்று குடங்களில் சந்தனம் நிரப்பி, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தேர், டிராக்டரில் வைக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஒலகடம், பட்லூர் நால் ரோடு, பூனாட்சி வழியாக வந்து இறுதியில், நேற்று அதிகாலை செம்படாம்பாளையம் கோவிலை வந்தடைந்தது.
அங்கு கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. முன்னதாக, ஊர்வலத்தில் வழிநெடுகிலும் உள்ள,
இந்துக்கள் பலரும் வழிபட்டு, தாயத்து வாங்கினர்.