உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) எதிர்பாராத நன்மை

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) எதிர்பாராத நன்மை

பெரியவர்களை மதிப்புடன் நடத்த விரும்பும் மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் புதன்,  ஜன.4- வரை உங்கள் ராசிக்கு 6-ம் இடமான விருச்சிகத்தில் இருந்து  நன்மை கொடுப்பார். அதன் பின் அவரால் நன்மை தர முடியாது.  குரு  மாதம் முழுவதும் நற்பலனை வாரி வழங்குவார்.  சூரியன் 7-ம் இடமான தனுசு ராசியில் இருப்பதால் நன்மை உண்டாகாது. சனி டிச.19- வரை, விருச்சிக ராசியில் இருந்து சமூகத்தில் அந்தஸ்தை உயர்த்துவார்.  ஆடம்பர வசதி பெருகும். மகிழ்ச்சி மனதில் குடியிருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். முயற்சியில் வெற்றி உண்டாகும்.  அவர் தனுசு ராசிக்கு மாறிய பின் குடும்பத்தில் பிரச்னை ஏற்படலாம். வீண் அலைச்சல் அதிகரிக்கும். வெளியூரில் தங்கும் சூழ்நிலை உருவாகும்.  யாரிடமும் அனாவசியமாக நெருங்கி பழக வேண்டாம்.

புதனால் குடும்பத்தில் சுபவிஷய பேச்சு நடக்கும். ஆற்றல் மேம்படும். வீட்டிற்கு தேவை யான வசதி கிடைக்கும். பெண்களால் மேன்மை உண்டாகும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜன.4க்கு பிறகு குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.  தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். டிச. 28,29ல்  உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜன.8,9ல் அவர்கள் வகையில் வீண்பிரச்னை வர வாய்ப்புள்ளதால் ஒதுங்கி இருக்கவும்.  ஜன.1,2ல் சகோதரிகள்  உதவிகரமாக செயல்படுவர்.

தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும்.  பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும். டிச.19-க்கு பிறகு முயற்சிகளில் தடைகள் குறுக்கி டலாம். அதை வெற்றிகரமாக முடிக்க பெண்கள் வசம் பொறுப்புகளை ஒப்படைக்கலாம். டிச.30,31, ஜன.3,4- ல் சந்திரனால் தடை குறுக்கிடலாம். ஆனால் டிச.16,17, ஜன.12,13- ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.

பணியாளர்கள் முன்னேற்றம் காண்பர். புதன் ஜன.4- வரை 6-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் சிறப்பான காலமாக அமையும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. அதிகாரிகளின் ஆதரவால் விரும்பிய இடத்திற்கு மாற்றம் பெறலாம். பணி விஷயமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.  தங்கள் கோரிக்கைகளை ஜன.4க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். அதன் பிறகு கடின உழைப்பு தேவைப்படும். அதிகாரிகளிடன் அனுசரித்து போவது நல்லது. முக்கிய பொறுப்பை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம். டிச.26,27ல் எதிர்பாராத நன்மை நடக்கும்.

கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் டிச.21க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் வகையில் தொல்லை குறுக்கிடலாம்.  சற்று ஒதுங்கி இருக்கவும்.  அரசியல்வாதிகள், பொது நல சேவகர்கள் மறைமுக போட்டியை சந்திப்பர்.

சிலருக்கு அவப்பெயர் உருவாகலாம். ஜன.10,11-ல் மனக்குழப்பம் ஏற்படலாம். மாண வர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு நெல், மஞ்சள், கீரை, காய்கறி, பழவகைகள், கிழங்கு வகை பயிர்களில் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க சிலகாலம் பொறுத்திருக்க நேரிடும்.

பெண்கள் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.  பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். மாத இறுதியில் விட்டுக் கொடுத்து போவது நல்லது.  

ஜன.5,6,7-ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். செவ்வாயால், உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். குறிப்பாக பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.

* நல்ல நாள்:  டிச.16, 17, 18, 19, 20, 26, 27, 28, 29, ஜன.1, 2, 5, 6, 7, 12, 13
* கவன நாள்: டிச. 21,22 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,3         நிறம்: மஞ்சள், பச்சை

* பரிகாரம்:

●  முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்
●  ராகு காலத்தில் நாகதேவதை வழிபாடு
●  அஷ்டமி நாளில் கால பைரவருக்கு அர்ச்சனை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !