உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) போட்டியில் வெற்றி

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) போட்டியில் வெற்றி

கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதி மிக்க கடக ராசி அன்பர்களே!

கடந்த மாதத்தை விட சிறப்பான வளர்ச்சி காத்திருக்கிறது.  சூரியன், தனுசுவிற்கு செல்வதால் நற்பலன் உண்டாகும். சுக்கிரன் டிச. 21 வரை நன்மை தருவார். புதன் ஜன.4- க்கு பிறகு தனுசு ராசிக்கு வந்த பின் சுப பலன் உண்டாகும்.  ராசிக்கு 5-ல் உள்ள சனியால் நன்மை ஏதும் கிடைக்காது. ஆனால் அவர் டிச.19-ல் 6-ம் இடமான தனுசு ராசிக்கு செல்கிறார்.  பொன், பொருள் கிடைக்கும்.  பணப்புழக்கம், முயற்சியில் வெற்றி உண்டாகும். அபார ஆற்றல் பிறக்கும். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவீர்கள். சனியின் 10-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமையும்.  தொழிலில் நல்ல முன்னேற்றம் கொடுப்பார்.

செல்வாக்கிற்கு எந்த குறையும் ஏற்படாது. சமூகத்தில் மரியாதை உயரும். சுக்கிரனால் டிச. 21- வரை பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.  நண்பர்கள் உதவி கரமாக செயல்படுவர். மனதில் பக்தி உயர்வு மேம்படும். ஜன.3,4-ல் பெண்களின் ஆதர வால் நன்மை ஏற்படும்.  டிச.30,31-ல் உறவினர் வருகையால் நன்மையை எதிர்பார்க் கலாம்.  ஜன.10,11ல் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஜன.8,9-ல் ஆடை, அணிகலன் வாங்கலாம். புதனால் கணவன், -மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். ஜன.4- க்கு பிறகு முயற்சி வெற்றி அடையும். சுபவிஷய பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும்.  வீட்டிற்கு தேவையான வசதி, வாய்ப்பு பெருகும். கணவன், -மனைவி இடையே இருந்த பிரச்னை மறையும். பிரிந்த குடும்பம்  ஒன்று சேரும்.

தொழில், வியாபாரத்தில் குறுக்கிட்ட முட்டுக்கட்டை அகலும்.  பகைவர் கெடு செயலை சாதுர்யத்தால் முறியடிப்பீர்கள்.  டிச.19 க்கு பிறகு சனி பலத்தால் லாபம் அதிகரிக்கும்.  முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள்.  வியாபாரத்தில் முழு கவனம் செலுத்துவீர்கள். டிச.18,19, 20ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும்.  ஜன.1,2,5,6,7-ல் சந்திரனால் தடை ஏற்பட்டு விலகும்.

பணியாளர்களுக்கு பணியிடத்தில் மதிப்பு உயரும். ஜன. 4- வரை அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். முக்கிய பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அதன் பின், புதனால் நல்ல முன்னேற்றம் காணலாம். சிலர் புதிய பதவி கிடைக்கப் பெறுவர். வேலை நிமித்தமாக குடும்பத்தை  பிரிந்தவர்கள் ஒன்று சேருவர். டிச.28,29ல் எதிர் பார்த்த கோரிக்கை நிறைவேறும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வருமானத்திற்கு குறைவிருக்காது. நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர்.  டிச.21-க்கு பிறகு முயற்சியில் தடை ஏற்படலாம். விழிப்புடன் இருப்பது நல்லது. அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமல்  பாடுபட வேண்டியதிருக்கும். டிச.16,17, ஜன.12,13-ல் வீண் குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும்.  மாத இறுதியில் புதன் சாதகமாக இருப்பதால் கல்வியில் வளர்ச்சி காண்பர்.   போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவர். விவசாயிகள் -உழைப்புக்கு ஏற்ப வருமானம் பெறுவர்.  மானாவாரி பயிர்கள், கீரை, காய்கறி மற்றும் பழ வகைகள் மூலம் வருமானம் அடைவர்.  புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடும். வழக்கு, விவகா ரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தினருடன் ஆன்மிக சுற்றுலா சென்று மகிழ்வர். குடும்ப ஒற்றுமை காப்பதில் அக்கறை தேவை. டிச.21,22- ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும். சகோதரிகளால் உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜன.8,9ல் பிறந்த வீட்டினரின் உதவி கிடைக்கும்.  ஜன.4- க்கு பின் பணிக்கு செல்லும் பெண்கள் உயர்வு காண்பர்.

* நல்ல நாள்: டிச.18, 19, 20, 21, 22, 28, 29, 30, 31, ஜன. 3, 4, 8, 9
* கவன நாள்: டிச. 23, 24, 25 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1, 9     நிறம்: சிவப்பு, வெள்ளை  

* பரிகாரம்:
●  சனியன்று அனுமனுக்கு துளசி அர்ச்சனை
●  ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு
●  நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !