திருப்புத்துார் வீர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா
திருப்புத்துார் : திருப்புத்துார் மேலக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. நேற்று காலை7:00 மணி அளவில் நின்ற நிலையில் உள்ள மூலவர் வீர ஆஞ்சநேயருக்கு மகா அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனைக்குப் பின் மூலவர் வெள்ளி அங்கி கவசத்தில் வடை மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து பக்தர்கள்அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் மாலை 4:00 மணிக்கு அபிேஷகம் நடந்து, மூலவர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில்சுவாமி தரிசனம் தொடர்ந்தது. இரவில் உற்சவர் கேடகத்தில் திருவீதி உலா நடந்தது. தேவகோட்டை: தேவகோட்டை ஆதிசங்கரர் கோயிலில் அனுமர் ஜெயந்தியை முன்னிட்டு பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதனை தொடர்ந்து சந்தன காப்பு சிறப்பு அலங்காரம் , சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில் லட்சார்ச்சனையை தொடர்ந்து 1008 வடைமாலை சாற்றி சிறப்பு பூஜைகள்,தீபாராதனை நடந்தது. தேவகோட்டை அருகே உள்ள மேலசெம்பொன்மாரியில் ஜெயவீர ஆஞ்சநேயருக்கு காலையில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து வடைமாலை சாற்றி சிறப்பு பூஜைகள் நடந்தன. அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.