காட்டுவனஞ்சூரில் அனுமந் ஜெயந்தி
ADDED :2960 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் அனுமந் ஜெயந்தி கொண்டாடபட்டது. காட்டுவனஞ்சூர் ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமந் ஜெயந்தியை முன்னிட்டு ராமர், சீதை, லஷ்மணர் மற்றும் ஆஞ்சநேய சுவாமிக்கு பால் ,தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.சந்தனகாப்பு சாத்தபட்டு, வடைமாலை, ஜாங்கிரி மாலை அணிவிக்கபட்டது. மகா தீபாராதினைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் வெங்கடேச பாகவதர், அன்பழகன், பழமலை, மணிகண்ட சாஸ்திரி, நாராயண குருக்கள், ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.