வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
ADDED :2894 days ago
செஞ்சி: புலிப்பட்டு கருவாட்சி தாங்கல் வீர ஆஞ்சநேயர் கோவில் நான்காம் ஆண்டு கும்பாபிஷேக தின விழாவும், அனுமன் ஜெயந்தியும் நடந்தது. செஞ்சி தாலுகா புலிப்பட்டு கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு நேற்று ஆஞ்சநேயர் ஜெயந்தி, நான்காம் ஆண்டு கும்பாபிஷேகம் மற்றும் மருத்துவர் சமுதாயம் சார்பில் குலதெய்வ வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 11 மணிக்கு சிறப்பு ஹோமம் மற்றும் மகா தீபாரதனை நடந்தது. பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.