உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனி பெயர்ச்சி விழா: காஞ்சி கோவில்களில் சிறப்பு ஏற்பாடு

சனி பெயர்ச்சி விழா: காஞ்சி கோவில்களில் சிறப்பு ஏற்பாடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சனி பெயர்ச்சியையொட்டி, பல்வேறு கோவில்களில், சிறப்பு ஏற்பாடுகள், தீவிரமாக நடந்து வருகின்றன. டிச., 19ம் தேதி, காலை, 9:59 மணிக்கு, சனீஸ்வர பகவான், விருச்சிக ராசியிலிருந்து, தனுசு ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல கோவில்களில் ஹோமம், லட்சார்ச்சனை சிறப்பு அபிஷேகம், ஆராதனைக்காக, ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.

27 நட்சத்திர கோவில்: காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலை, உக்கம்பெரும்பாக்கம், 27 நட்சத்திர கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அசுவணி முதல், ரேவதி வரையிலான, 27 நட்சத்திரங்களின் அதிதேவதைகளையும், அவற்றிக்குண்டான, 27 விருட்சங்களையும் உடைய கோவில் அமைந்துள்ளது. இங்கு, சனீஸ்வர பகவான் சன்னதியில், பெயர்ச்சியினால், பரிகார ராசிகளுக்காகவும், நற்பலன்களை அருள வேண்டும் என்பதற்காவும், பரிகார ஹோமங்களும், சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு கலச அபிஷேகமும் நடைபெறுகிறது.

வட திருநள்ளார் என அழைக்கப்படும், மதுராந்தகம் அடுத்த மேட்டுப்பாளையம், சனீஸ்வரர் சன்னதியில், யாகசாலை லட்சார்ச்சனை, ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.சனீஸ்வர பகவானுக்கு உகந்த, ஒன்பது பரிகாரங்களின்படி, 50 மூட்டை அரிசியில், உணவு தயார் செய்து அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், சேர்மன் சாமி நாதன் தெருவில் உள்ள மகா ஆனந்தருத்திரேசர் கோவிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது.மங்கள சனீஸ்வரர்சின்ன காஞ்சிபுரம், பெரிய தம்பிரான் ஈஸ்வரன் மற்றும் வேதவன்னீஸ்வரர் கோவிலில், தம்பதி சமேதராய் மங்கள சனீஸ்வர பகவான், மணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். அன்று காலை, சிறப்பு பூஜையும், அர்ச்சனையும், மாலை, 6:00 மணிக்கு, அனைத்து ராசியினருக்கும், பொதுப்பலன் மற்றும் பரிகாரங்கள் குறித்து ஜோதிடர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !