உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மொரட்டாண்டி கோவிலில் நாளை சனிப்பெயர்ச்சி விழா

மொரட்டாண்டி கோவிலில் நாளை சனிப்பெயர்ச்சி விழா

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் நாளை (19ம் தேதி) சனிப் பெயர்ச்சி விழா நடக்கிறது. வானுார் வட்டம் மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், சனிப்பெயர்ச்சி விழா நாளை நடக்கிறது. விழாவை முன்னிட்டு, இன்று (18ம் தேதி) சனிப்பெயர்ச்சி மகா யாகம் காலை 6.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து நவகிரக ஹோமமும், கோ பூஜையும் நடக்கிறது. முக்கிய விழாவான சனிப்பெயர்ச்சி விழா நாளை 19ம் தேதி நடக்கிறது. காலை 6.00 மணிக்கு சனி பகவானுக்கு 1008 லிட்டர் நல்லெண்ணெய் அபிஷேகமும், 10.00 மணிக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து மதியம் 2.07 மணிக்கு சனிப் பெயர்ச்சி விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !