உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சிபுரம் : பக்த ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம்நேற்று விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் கிழக்கு மாட வீதியில், வேன் ஓட்டுனர்கள் சங்கத்தினர், பக்த ஆஞ்சநேயர் கோவிலை கட்டியுள்ளனர்.அதற்காக, நேற்று முன்தினம், ஆஞ்சநேயர் உற்சவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து, மூன்று நாட்களாக சிறப்பு யாகம் நடைபெற்றது.நேற்று காலை, 7:30 மணிக்கு, மகர லக்னத்தில், ஆஞ்சநேயர் தனி சன்னதிக்கு, ஸ்ரீதர் குருக்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !