ஞானமங்கள சனீஸ்வரர் கோவிலில் நாளை சனிப்பெயர்ச்சி: பரிகார மகா யாகம்
ADDED :2894 days ago
திருவள்ளூர் : ஞானமங்கள சனீஸ்வரர் கோவிலில், நாளை, சனிப்பெயர்ச்சி பரிகார மகா யாகம் நடைபெறுகிறது. திருவள்ளூர் அடுத்த, காக்களூர், பூங்கா நகரில் யோகஞான தட்சிணாமூர்த்தி பீடத்தில், ஞானமங்கள சனீஸ்வர பகவான் சன்னதி அமைந்துள்ளது. நாளை, சனீஸ்வர பகவான் விருச்சிக ராசியிலிருந்து, தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.இதையொட்டி, அன்றைய தினம், இக்கோவிலில், சனிப்பெயர்ச்சி பரிகார மகா யாகம் நடைபெறுகிறது. தனுசு, மகரம், மீனம், ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்கள் இந்த யாகத்தில் கலந்து கொள்ளலாம்.