உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைத்தியநாத சுவாமி கோயிலில் நாளை சனிப்பெயர்ச்சி வழிபாடு

வைத்தியநாத சுவாமி கோயிலில் நாளை சனிப்பெயர்ச்சி வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் வைத்தியநாதசுவாமி கோயிலில் நாளை சனிபெயர்ச்சி விழா நடக்கிறது. நாளை காலை 9:59 மணிக்கு சனிபகவான் கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசியிலிருந்து மூலநட்சத்திரம் தனுசு ராசிக்கு பெயர்ச்சியடைகிறார். இதனை முன்னிட்டு நாளை, டிச.19 காலை 7:00 மணிக்கு ஸ்ரீசனிபகவானுக்கு கும்பம் வைத்து ஜெபம் செய்து, விசேஷ அபிேஷக ஆராதனைகள் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு சனிபகவான் மகிமை குறித்து, ஜோதிடர் பாலசுப்பிரமணியன் சொற்பொழிவாற்றுகிறார். ஏற்பாடுகளை தக்கார் நடராஜன், செயல் அலுவலர் நாராயணி செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !