கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா
ADDED :2893 days ago
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், சனிப் பெயர்ச்சியையொட்டி லட்சார்ச்சனை விழா நேற்று துவங்கியது. சனி பகவான் நாளை விருச்சிக ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதையடுத்து, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று லட்சார்ச்சனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். இன்று காலை, விநாயகர் வழிபாடு மற்றும் நவக்கிரக அபிஷேகம் நடக்கிறது. நாளை காலை, சனீஸ்வரருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.