மகுடேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி லட்சார்ச்சனை
ADDED :2965 days ago
கொடுமுடி: சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு, கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது. சனி பகவான் வரும், 19ல் விருச்சிக ராசியிலிருந்து, தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். இதையொட்டி, மகுடேஸ்வரர் கோவில் வளாகத்தில், சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், லட்சார்ச்சனை நேற்று காலை தொடங்கியது. அதைதொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.