எருது விடும் விழா: 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு
ADDED :2892 days ago
ஓசூர்: சூளகிரி அருகே நடந்த எருது விடும் விழாவில், 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, எருது விடும் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு எருது விடும் விழாவிற்கு, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்குமா என்ற சந்தேகம் எழுந்ததால், பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, சூளகிரி அடுத்த, தொட்டி அருகேயுள்ள கொழுமூர் கிராமத்தில், நேற்று காலை எருது விடும் விழா நடத்தப்பட்டது. ஊர் ஒதுக்குப்புறத்தில் நடந்த விழாவில், மேடுபள்ளி, அழகுபாவி, மாதரசனப்பள்ளி, அத்திமுகம், எட்டிப்பள்ளி, தியாகரசனப்பள்ளி, ராயக்கோட்டை, உள்ளட்டி, செட்டிப்பள்ளி கிராமங்கள் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து, 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதை வீரர்கள் அடக்கி, பரிசுகளை தட்டிச்சென்றனர்.