உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிபராசக்தி மன்றத்தில் சக்திமாலை அணிவித்தல்

ஆதிபராசக்தி மன்றத்தில் சக்திமாலை அணிவித்தல்

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ஆதிபராசக்தி மன்றத்தில் சக்திமாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கண்டாச்சிபுரம் ஆதிபராசக்தி மன்றத்தின் சார்பில்,நேற்று காலை 10.௦௦ மணிக்கு அம்மன் திருஉருவப்படத்திற்கு சிறப்பு தீபாராதனைகளும் பஜனைகளும் நடந்தது. தொடர்ந்து, மன்றத் தலைவர் அருள்ஜோதி தலைமையில் சக்திமாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், வீரங்கிபுரம், புதுப்பாளையம், கீழ்வாலை, மேல்வாலை, ஒடுவன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ௫௦க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சக்திமாலை அணிந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மன்ற நிர்வாகிகள் அன்பு,கணபதி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !