மதுரையில் வேங்கடரமண ஜெயந்தி விழா
ADDED :2892 days ago
மதுரை: மதுரையில் வேங்கடரமண பாகவத சேவாசமாஜம் சார்பில் பாகவதரின் 237வது ஜெயந்தி விழா நடந்தது. சமாஜத்தின் தலைவர் சாந்தாராம் தலைமை வகித்தார். தியாகராஜன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். வேங்கடரமண பாகதவர், சவுராஷ்ட்டிரா சமூகத்துடன் உள்ள நட்பு குறித்து பாடகர் சிவசிதம்பரம் பேசினார். இசை கலைஞர்கள் தியாகராஜன், மஞ்சுளாவிற்கு பாகவதர் விருதுகள் வழங்கப்பட்டன. நாதஸ்வர வித்வான் கணேசன், சமஸ்கிருத பேராசியர் தாமோதரன் கவுரவிக்கப்பட்டனர். சவுராஷ்ட்டிரா கல்வியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் ராமமூர்த்தி, கல்லுாரி கவுன்சில் தலைவர் ராம்தாஸ், ஈசா பொறியியல் கல்லுாரி தலைவர் ஈஸ்வரமூர்த்தி, நிர்வாகி சாந்தமூர்த்தி, பா.ஜ., மகளிர் அணி மாநில தலைவி ஏ.ஆர்.மகாலட்சுமி பங்கேற்றனர்.