உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞானபுரி கோவிலில் அனுமன் ஜெயந்தி

ஞானபுரி கோவிலில் அனுமன் ஜெயந்தி

திருவாரூர்: திருவோணமங்கலம், ஞானபுரி சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று, அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் - கும்பகோணம் சாலையில், ஆலங்குடி குரு பகவான் கோவிலில் இருந்து, 1 கி.மீ.,யில், இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலை, 32, அடி உயரம் உடையது. அனுமன் ஜெயந்தியான நேற்று, ஆஞ்நேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. திரளான பக்தர்கள், ஆஞ்சநேயரை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !