உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் மண்டலபூஜையன்று தரிசன நேர மாற்றம் இல்லை

சபரிமலையில் மண்டலபூஜையன்று தரிசன நேர மாற்றம் இல்லை

சபரிமலை: மண்டலபூஜை நாளில் பக்தர்கள் தரிசன நேரத்தில் மாறுதல் இருக்காது என்று தேவசம்போர்டு உறுப்பினர் ராகவன் கூறினார்.சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல பூஜை சடங்குகள் 10:15 மணிக்கு தொடங்குகிறது. 11:04 முதல் 11:40க்கு இடைபட்ட நேரத்தில் கும்பராசியில் மண்டலபூஜை நடைபெறும் என்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அறிவித்து உள்ளார். இதனால் பக்தர்கள் தரிசன நேரத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று தேவசம்போர்டு உறுப்பினர் ராகவன் கூறினார்.மண்டலபூஜை முடிந்த பின்னர் பகல் ஒரு மணி வரையிலும், மாலையில் 3:30 மணிக்கு நடை திறந்து இரவு 11:00 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும். எனினும் 26-ம் தேதி காலை 9:00 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறும். அதன் பின்னர் நெய்யபிஷேகம் 31ம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு தொடங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !