உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்பு அனுமத் ஜெயந்தி வழிபாடு

வத்திராயிருப்பு அனுமத் ஜெயந்தி வழிபாடு

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு ஆற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் மாத்வபந்து பஞ்சாங்கப்படி அனுமத்ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலையில் மூலஸ்தான ஆஞ்சநேயருக்கும், உற்ஸவருக்கும் பக்தர்கள் முன்னிலையில் 18 வகை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மூலஸ்தான ஆஞ்சநேயருக்கு ஆயிரத்தெட்டு வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஜெயமாருதி பக்தசபாவினரின் பஜனை வழிபாடும், ஆஞ்சநேய உற்ஸவமும் நடந்தது. உற்ஸவருக்கும், மூலவருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !