திருமலை வையாவூரில் அனுமன் ஜெயந்தி விழா
ADDED :2888 days ago
தென் திருப்பதி என அழைகப்படும், திருமலைவையாவூர், மலையடிவாரத்தில் உள்ள, ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. ஒன்பது கலசங்கள் வைக்கப்பட்டு, சிறப்பு வேள்வி நடந்தது. சுவாமிக்கு, பால், தயிர், பன்னீர், மஞ்சள், சந்தனத்தால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி எஸ்.செந்தில்குமார், ஆய்வாளர் கே.மனோகரன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். - நமது நிருபர் -