ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா
ADDED :2887 days ago
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார்‚ ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்தது. திருக்கோவிலுார்‚ கணக்குப்பிள்ளை வீதியில் உள்ள ஐயப்பன் கோவிலில்‚ கடந்த 16ம் தேதி காலை, சுவாமிக்கு 108 சங்காபிஷேகம்‚ மாலை குத்துவிளக்கு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து‚ சுவாமி ஐயப்பன் வாழை மட்டை குடிலில் ஐய்யப்ப சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். தென்பெண்ணையில் இருந்து தீர்த்தகலசங்கள் புறப்பாடாகியது. பின், கலசபூஜை‚ கணபதி ஹாமம்‚ சாஸ்தா ஹாமம்‚ மகா பூர்ணாகுதி‚ சுவாமிக்கு மகா அபிஷகம்‚ மூலவர் ஐயப்பனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது.