ரகூத்தம சுவாமிகளின் 445வது ஆராதனை விழா
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார்‚ மணம்பூண்டி‚ பிருந்தாவனத்தில் ரகூத்தமதீர்த்த சுவாமிகளின் ஆராதனை விழா, வரும் 28ம் தேதி துவங்குகிறது. பாவபோதகர் என போற்றப்பட்டவரும்‚ உத்திராதிமடத்தின் குருவாகிய ஸ்ரீ ரகூத்தம சுவாமிகளின் பிருந்தாவனம், திருக்கோவிலுார் அடுத்த மணம்பூண்டியில் உள்ள தென்பெண்ணை நதிக்கரையில் அமைந்துள்ளது. அவரது 445 வது ஆராதனை தினவிழா, வரும் 28ம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடக்கிறது. முதல்நாள் அதிகாலை 5:00 மணிக்கு‚ பிருந்தாவனத்திற்கு நிர்மால்ய அபிஷகம்‚ பண்டிட்களின் பாராயணம்‚ பஞ்சாமிர்த அபிஷகம்‚ ரதோற்சவம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏகாதசி மற்றும் துவாதசி தினமான 29 மற்றும் 30ம் தேதி‚ சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, உத்ராதிமடத்தின் பீடாதிபதி ஸ்ரீ சத்யார்த்தம தீர்த்த சுவாமிகளின் தலைமையில்‚ வித்வான் ஆனந்த தீர்த்தாசார்ய சிம்மலகி மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.