/
கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவம்: பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் சேவை
ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவம்: பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் சேவை
ADDED :3138 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா, டிசம்பர், 18ல் திருநெடுந்தாண்டகம் நிகழ்வுடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. விழாவின் பகல் பத்து உற்சவத்தின் இரண்டாம் நாளில், பாண்டியன் கொண்டை, முத்துச்சரம், வைர அபய ஹஸ்தம், பவள மாலை, திருமார்பில் மகாலட்சுமி பதக்கம், அரைஞான் ஆபரணங்கள் அணிந்து நம்பெருமாள் மூலஸ்தானத்தில், இருந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.