உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிச்சிகோயில், நல்லிப்பட்டியில் பக்தர்கள் வழிபாடு

பெரிச்சிகோயில், நல்லிப்பட்டியில் பக்தர்கள் வழிபாடு

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகேயுள்ள பெரிச்சிகோயில் மற்றும் நல்லிப்பட்டியில் சனீஸ்வரர் சன்னதிகளில் நேற்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நடந்த சிறப்பு ேஹாமத்தில் திரளாக பக்தர்கள் பங்கேற்று சனிபகவானை வழிபட்டனர்.நேற்று காலை 9:59 மணி முதல் 10:02 மணி வரை விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியானார். அதை முன்னிட்டு திருப்புத்துார் அருகே சனீஸ்வரன் தனியாக நின்ற நிலையில் எழுந்தருளியுள்ள பெரிச்சிகோயிலில் அதிகாலை 5:30 மணிக்கு சனீஸ்வர மகா ேஹாமம் துவங்கியது. மூலவர் சனீஸ்வரன் வெள்ளிக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து காலை10:00 மணி அளவில் ேஹாமம் நிறைவடைந்து ேஹாமத்திலிருந்த கலசங்களின் புனித நீரால் சனீஸ்வரருக்குமேளதாளத்துடன் சிறப்பு அபிேஷகம் நடந்தது தொடர்ந்து கோபுர, மகாதீபம் நடந்தது.தொடர்ந்து மூலவர் சந்தனக்காப்பில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலைமுதல் பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர். கண்டரமாணிக்கத்திலிருந்து பெரிச்சிகோயில் வரை பக்தர்கள் கூட்டம் இருந்தது.

அது போலவே திருப்புத்துார் ஒன்றியம் உள்ள நல்லிப்பட்டி சவுந்தரநாயகி நல்லுார் ஆண்டவர் கோயிலில் தனி சனீஸ்வரருக்கும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நடந்த சிறப்பு ேஹாமம், அபிேஷக,ஆராதனை திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். திருப்புத்துார்,காரைக்குடி,பொன்னமராவதியிலிருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

சிவகங்கை: சிவகங்கையில் சனீஸ்வரருக்கு தனி கோயில் உள்ளது. இக்கோயில் சனிப்பெயர்ச்சி விழா டிச., 17 காலை 9:00 மணிக்கு அனுக்ஞை விநாயகர் பூஜையுடன் துவங்கியது. மாலை 4:15 மணிக்கு முதல்கால யாகபூஜையும், நேற்று காலை 6:00 மணிக்கு வேதபாராயணம், திருமுறை பாராயணம், இரண்டாம் காலயாக பூஜை, காலை 10:00 மணிக்கு ஏக தின லட்சார்ச்சனை, மாலை 6:00 மணி, மூன்றாம் காலயாக பூஜை நடந்தன. நேற்று காலை 5:30 மணிக்கு கடம் புறப்பாடும், காலை 9:59 மணிக்கு விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகும் நிகழ்ச்சியும் நடந்தன. தொடர்ந்து மகா அபிேஷகம், தங்ககவசம் அணிவித்து மகா தீபாராதனை நடந்தன. காலை 11:00 மணிக்கு அன்னதானமும், இரவு 7:00 மணிக்கு சனீஸ்வர பகவான் காக்கை வாகனத்தில் வீதி உலாவும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விஸ்வகர்மா பொதுநலப் பூங்கா டிரஸ்ட் மற்றும் விழாக்குழுவினர் செய்தனர்.

காளையார்கோவில்: காளீஸ்வரர் கோயிலில் நவகிரக சன்னதி தனியாக உள்ளது. இங்கு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணி முதல் சிறப்பு ேஹாமம், சனி பகவானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கோயில் ஸ்தானிகம் காளீஸ்வர குருக்கள் பூஜைகளை நடத்தினார். காளையார்கோவில் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசித்தனர். தேவஸ்தான மேலாளர் இளங்கோ ஏற்பாடுகளை செய்தார்.

தேவகோட்டை: சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் நவகிரக சன்னதியில் உள்ள சனீஸ்வரர், நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள சனீஸ்வரர் சன்னதி,இறகுசேரி மும்முடிநாதர் கோயில், ஆதி சங்கரர் கோயிலில் சனிப்பெயர்ச்சியை யொட்டி சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !