உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் மலையடிவார சனீஸ்வரர் கோயில்சனி பெயர்ச்சி விழா

திண்டுக்கல் மலையடிவார சனீஸ்வரர் கோயில்சனி பெயர்ச்சி விழா

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சனிப்பெயர்ச்சியையொட்டி நேற்று கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. மலையடிவார சனீஸ்வரர்கோயில், அபிராமி அம்மன், கோட்டை மாரியம்மன் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் சிறப்புபூஜை மற்றும் யாகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.பழநி திருஆவினன்குடி, பெரியாவுடையார், பெரியநாயகி அம்மன் கோயில் களிலும் சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயிலில், அதிகாலை முதல் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது. சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், தாண்டிக்குடி பாலமுருகன் கோயில் மற்றும் பட்டத்து விநாயகர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !