உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா

மயிலம் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா

மயிலம் : மயிலம் கோவிலில் சனிப்பெயர்ச்சி வழிபாடு நடந்தது. மயிலம் முருகர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, நேற்று காலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள பாலசித்தர், வினாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர், நவகிரக சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. காலை 10:01 மணிக்கு சனிஸ்வரருக்கு சிறப்பு பாலபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு உற்சவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !