உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூரில் மார்கழி உற்ஸவம்: டிச.,29 இரவில் பரமபத வாசல் திறப்பு

திருக்கோஷ்டியூரில் மார்கழி உற்ஸவம்: டிச.,29 இரவில் பரமபத வாசல் திறப்பு

திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் நேற்று மார்கழிஉற்ஸவம் துவங்கியது. டிச.,29 இரவு 10:30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படும் சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மார்கழி உற்ஸவத்தில் பகல் பத்து, ராப்பத்து,வைகுண்ட ஏகாதசி உற்ஸவம்நடைபெறும். பகல் பத்து உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று மாலை பதினொரு ஆழ்வார்களும் ஆண்டாள் சன்னதி எழுந்தருளினர். தொடர்ந்துபெருமாளும் ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளினார். அடுத்து உற்ஸவத்திற்காக காப்புக் கட்டப்பட்டது.

தொடர்ந்து திவ்ய பிரபந்த கோஷ்டி,ஆழ்வாருக்கு மரியாதை நடந்தது. இரவில் பெருமாள், ஆண்டாள் சன்னதி மூலஸ்தானம்எழுந்தருளினர்.தொடர்ந்து பகல் பத்து உற்ஸவம் டிச.,28 வரை நடைபெறும். டிச.,29ல் காலை மூலவர் முன் மண்டபத்தில் சயனஅலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிப்பார்.இரவு 8:00 மணிக்கு அமர்ந்த நிலையில் ராஜ அலங்காரத்தில் காட்சி அளிப்பார்.பின்னர்இரவு 10:30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு பெருமாள் எழுந்தருள்வார். தொடர்ந்து இரவுப் பத்து உற்ஸவம் துவங்கும்.தினசரி 7:30 மணிக்கு பெருமாள் தாயார் சன்னதி எழுந்தருளி பரமபத வாசல் திறக்கப்படும். பின்னர் தென்னை மரவீதி புறப்பாடு நடைபெறும்.ஜன.,8 வரை ராப்பத்து உற்ஸவம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !