அனுமனின் குரு!
ADDED :2896 days ago
அனுமனுக்கு குருவாக இருந்து கல்வி கற்றுக்கொடுத்தவர்
சூரிய பகவான். அவருக்கு நன்றிகடன் பட்டிருந்த அனுமன், “தங்களுக்கு
குருதட்சணையாக என்ன தர வேண்டும்? என கேட்டார். சூரியன், தன் மகன்
சுக்ரீவனுக்கு மந்திரியாக இருந்து அவனை வழிநடத்திச் செல்லும்படி கூறினார்.
அதன்படியே ஆஞ்சநேயர் சுக்ரீவனுடன் இருந்து, சூரியனுக்கு தன் நன்றியை
செலுத்தினார்.