உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / என்ன மாலை அணிவிக்கப் போகிறீர்கள்!

என்ன மாலை அணிவிக்கப் போகிறீர்கள்!

ராமதாசர், ராமாயணம் எழுதிக் கொண்டிருந்த போது தனது சீடர்களுக்கு, அதைப் படித்துக் காட்டுவார். அப்போது யாரும் அறியாமல் அனுமன் அங்கு வந்து அமருவார். ஓரு முறை அசோகவனத்தில் வெள்ளை மலர்களை அனுமன் பார்த்ததாக ராமதாசர் சீடர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அனுமன், “நான் வெள்ளை மலர்களை பார்க்கவில்லை, சிவப்பு மலர்களை தான் பார்த்தேன்” என்றார். ராமதாசர் அதை மறுத்தார்.  “பார்த்த நானே சொல்லும் போது திருத்திக் கொள்ள வேண்டியது தானே” என அனுமான் வாதிட, வழக்கு ராமனிடம் சென்றது. அவர், “ஆஞ்சநேயா! நீ பார்த்து வெள்ளை மலர்களைத் தான்” என தீர்ப்பளித்தார். அதற்கான விளக்கத்தையும் அவர் சொன்னார்.  “அசோகவனத்தில் நீ இருந்த போது, உனது கண்கள் கோபத்தால் சிவந்திருந்தன. அதனால் அந்த மலர்களும் சிவப்பாக தோன்றின. நாம் உலகை எந்த நோக்கில் பார்க்கிறோமோ அதன்படி தான் நமக்கு அது தெரியும்’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !