ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவம்: ரத்தின அபய ஹஸ்தம் அணிந்து நம்பெருமாள் சேவை
ADDED :3158 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா, டிசம்பர், 18ல் திருநெடுந்தாண்டகம் நிகழ்வுடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. விழாவின் பகல் பத்து உற்சவத்தின் மூன்றாம் நாளில், முத்துசாய கொண்டை, ரத்தின மகரி, ரத்தின அபய ஹஸ்தம், மார்பில் மகாலட்சுமி பதக்கம், வைர ஒட்டியானம், நெல்லிக்காய் மாலை, ரத்தின பாதம், உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து நம்பெருமாள் மூலஸ்தானத்தில், இருந்து அர்ச்சுன மண்டபத்துக்கு எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.