உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தாண்டில் பவுர்ணமி கிரிவலம் : தி.மலையில் கூடுதல் பாதுகாப்பு

புத்தாண்டில் பவுர்ணமி கிரிவலம் : தி.மலையில் கூடுதல் பாதுகாப்பு

வேலுார்: திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமியன்று, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி, மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம், ஜனவரி, 1ல் புத்தாண்டு அன்று அமைந்திருக்கிறது. காலை, 10:08 மணிக்கு துவங்கி, 2ம் தேதி காலை, 8:49 மணி வரை, தி.மலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, 31ல் ஞாயிறு, புத்தாண்டு தினமான, 1ம் தேதியும், விடுமுறை என்பதால், கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும், வழக்கத்தை விட கூடுதலாக பக்தர்கள் வருகை இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !