மஹாசுவாமிகள் சிலை சங்கரமடத்தில் வழிபாடு
ADDED :2865 days ago
காஞ்சிபுரம்: பாதயாத்திரையாக காஞ்சிபுரம் வந்த, சங்கராச்சாரியார் மஹாசுவாமிகள் சிலைக்கு, சங்கர மடத்தில் பூஜை நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலம், கூத்தனுார், சதுர்வேத கிராமத்தில், காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹா சுவாமிகளின், பஞ்சலோக சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக, மாமல்லபுரத்தில், 4.5 அடி உயரத்தில், மஹாசுவாமிகளின், பஞ்சலோக சிலை தயார் செய்யப்பட்டு, சென்னை நங்கநல்லுாரில் இருந்து, மஹா சுவாமிகளின் சிலையுடன், கதிராமங்கலத்திற்கு பாத யாத்திரையாக செல்கின்றனர். இக்குழுவினர், நேற்று காஞ்சிபுரம் சங்கரமடம் வந்தனர். அங்கு மஹா சுவாமிகள் சிலைக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, சங்கர மடத்தில் வழிபட்டனர். பின், பாத யாத்திரை குழுவினர் கலவை வழியாக வந்தவாசிக்கு சென்றனர்.