உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் சேவா சங்க ஆண்டு விழாவில் சிறப்பு பூஜைகள்

ஐயப்பன் சேவா சங்க ஆண்டு விழாவில் சிறப்பு பூஜைகள்

கரூர்: ஐயப்ப சேவா சங்க ஆண்டு விழாவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கரூர், பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள, அன்னகாமாட்சி அம்மன் கோவிலில், சுவாமி ஐயப்பன் சேவா சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, உற்சவர் ஐயப்பனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, பூஜைகள் நடந்தன. ஏராளமான ஐயப்பன் பக்தர்கள், பங்கேற்ற பஜனை நடந்தது. அதன் பின், 18 படிக்கு புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்யப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது. அதன்பின், கோவில் பின்புறமுள்ள மண்டபத்தில், 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து ஐயப்பனின் பிரசாதங்கள் பெற்று சென்றனர். நிர்வாகிகள் சிவசாமி, மதியழகன், ரமேஷ், பாலுசாமி, சண்முகசுந்தரம் மற்றும் ஐயப்பன் பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !