வீட்டில் காளியம்மன் படத்தை வைத்து வழிபடலாமா?
ADDED :2945 days ago
காளியம்மன், நரசிம்மர், சரபேஸ்வரர் போன்ற உக்ர தெய்வங்களை வீட்டில் வைத்து வழிபட பயப்படுகிறார்கள். ஆனால், தெய்வ தத்துவம்எதுவானாலும் நம்மைக் காப்பாற்றுவதற்காக எழுந்த அவதாரம் தான். அதர்மத்தை அழிக்க வரும் போது ஆவேசநிலையில் வெளிப்பட்டதால் காளி உக்ரமாக காட்சியளிக்கிறாள். குழந்தையாக அவளை அணுகி பக்தி செய்தால், பெற்ற தாயாக உங்களுக்கு அருள்புரிவாள்.