உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஹா பெரியவர் ஆராதனை: அதிருத்ர மஹாயாகம் விழா நிறைவு

மஹா பெரியவர் ஆராதனை: அதிருத்ர மஹாயாகம் விழா நிறைவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் உள்ள மகான் சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில், உலக நன்மை வேண்டி கடந்த, 12 முதல் நேற்று வரை காஞ்சி மஹா பெரியவர் சந்திரசேகர் சுவாமிகள் ஆராதனை விழா மற்றும் அதிருத்ர மஹாயாகம் நடந்தது. இதில், 150க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் பங்கேற்று, தினமும் காலை, 7:00 மணி முதல் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணி வரை அவஹந்தி ஹோமம், மஹாந்யாஸம், ருத்ரஜபம், மற்றும் ஹோமம், சண்டி பாராயணம், ருக்ஸம்ஹிதா ஹோமம், விஷ்ணு சகஸ்ரநாமம், ருத்ரக்ரமா அர்ச்சனை, லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை, அவதாரிகை நடத்தினர். நிறைவு நாளான நேற்று அதிருத்ர சத சண்டி ஹோம பூர்த்தி பூஜை, ருக்ஸ்மஹிதா ஹோமம் பூர்த்தி, வசோர்த்தாரை, பூர்ணாஹதி, கலச அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !