மாதா அமிர்தானந்தமயி சேவா சமிதி சார்பில் சனிபெயர்ச்சி ேஹாமம்
ADDED :2953 days ago
விழுப்புரம்: விழுப்புரம் ஜெயசக்தி மண்டபத்தில், மாதா அமிர்தானந்தமயி சேவா சமிதி சார்பில், சனிபெயர்ச்சி ேஹாமம் நடந்தது. கேரளா மாநிலம் மாதா அமிர்தானந்தமயி ஆசிரம சுவாமிகள் பிரசன்னாமிர்த சைதன்யா தலைமை தாங்கி, சனிபெயர்ச்சி ேஹாமம் செய்தார். இதனை தொடர்ந்து, சனீஸ்வர அஷ்டோத்திரம், பஜனை பாடல்கள், பூர்ணாஹூதி, ஹாரத்தி மந்திர ேஹாமங்கள் நடந்தன. சனிபெயர்ச்சி ேஹாம நிகழ்ச்சிகளை, சேவா சமிதி தலைவர் தனபால், செயலாளர் ஈஸ்வரதாஸ், திருப்பணி குழு தலைவர் ராமமூர்த்தி, சவுந்தரராஜன், முரளிதரன் ஆகியோர் செய்திருந்தனர்.