உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கழுக்குன்றத்தில் நாளை குருபூஜை விழா

திருக்கழுக்குன்றத்தில் நாளை குருபூஜை விழா

திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் சுப்பையா சுவாமிகளின், 58வது குரு பூஜை விழா நாளை நடைபெறுகிறது. தொண்டை மண்டல சிவாலயங்களில் முக்கியதலமாக திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் விளங்குகிறது.நான்கு வேதங்களும், நான்கு சமய குரவர்களும் இங்குள்ள வேதகிரீஸ்வரரை புகழ்ந்து பாடியுள்ளனர். பெரிய மலையின் மீது அமைந்துள்ள வேதகிரீஸ்வரரை, சித்தர்கள் பலர் வழிபாடு நடத்தி ஆன்மிகபணியில் ஈடுபட்டு உள்ளனர்.அந்த வகையில், இப்பகுதியில் கடும் விரதம் மேற்கொண்டு, சைவ நெறிமுறைகளை பரப்பியவர்களில் ஒருவர், சுப்பையா சுவாமிகள்.கடந்த, 48 ஆண்டுகளுக்கு முன், சித்தி அடைந்தார். தொடர்ந்து ஆண்டுதோறும் மாணிக்கவாசகர் உற்சவம் தொடங்கும் நாளில், அவரது குருபூஜை விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு, 58வது குருபூஜை விழா நாளை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !