ஸ்ரீவித்யா கணபதி கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :2951 days ago
அவனியாபுரம், மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி வளாகத்திலுள்ள ஸ்ரீவித்யா கணபதி கோயிலில் இரண்டாம் ஆண்டு வருடாபிஷேக விழா கல்லுாரி செயலாளர் தியாகராஜன் தலைமையில் நடந்தது. யாகசாலை பூஜைகள் முடிந்து மூலவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. கல்லுாரி முதல்வர் கண்ணன், துணை முதல்வர் கிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.