உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு ராத்திரி சத்திரத்தில் சீனிவாச கல்யாணம்

ஈரோடு ராத்திரி சத்திரத்தில் சீனிவாச கல்யாணம்

ஈரோடு: ஈரோடு ராத்திரி சத்திரத்தில், சீனிவாச கல்யாணம் நாளை நடக்கிறது. ஈரோடு பெரியார் வீதியில் உள்ள, ராத்திரி சத்திரத்தில் (ஆனந்த தீர்த்தா டிரஸ்ட்) வைரவிழா சீனிவாச கல்யாண வைபவத்தை முன்னிட்டு, 20 முதல், 24 வரை தினமும், மாலையில் ஸ்ரீமத் பாகவதம் உபன்யாசம் நடந்து வருகிறது. இன்று, நாளை ஸ்ரீமத் பாகவதம் கண்காட்சி நடக்கிறது. நாளை (24ம் தேதி) காலை, 7:30 மணிக்கு சீனிவாச பெருமாள் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் ஊர்வலம் நடக்கிறது. இதையடுத்து காலை, 9:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளின், 75வது கல்யாண உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !