உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோடி கோடியாய் பொருள் சேர...

கோடி கோடியாய் பொருள் சேர...

கஜேந்திரன் என்னும் யானையை காத்த விஷ்ணுவின் வரலாறு ஸ்ரீரங்கராஜ ஸ்தவம்என்னும் ஸ்தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. வைகுண்டத்தில் விஷ்ணுவும், மகாலட்சுமியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். தோற்றவர் எழுந்து ஓடக்கூடாது என்பது நிபந்தனை. இதற்காக விஷ்ணுவின் அங்கவஸ்திர நுனியும், லட்சுமியின் முந்தானையும் முடிச்சிடப்பட்டது. அந்த சமயத்தில் தான், முதலையிடம் சிக்கிய யானை கூக்குரலிட்ட சப்தம் விஷ்ணுவின் காதில் விழுந்தது. கணப்பொழுதும் தாமதிக்காமல் விஷ்ணு கருட வாகனத்தில் யானையைக் காக்கப் புறப்பட்டார். முந்தானை முடியப்பட்டு இருந்ததால் மகாலட்சுமியும் பெருமாளோடு உடன் வந்தாள். இதை பராசர பட்டர், ரங்கராஜரே! அந்த யானையை காப்பாற்றியதற்காக மட்டும் நான் உன்னை வணங்கவில்லை. கணப்பொழுதும் தாமதிக்காமல் லட்சுமியோடு வந்தாயே! அந்த வேகத்தை எண்ணி கை கூப்பி நன்றியோடு அஞ்சலி செய்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார். நம் கஷ்டம் தீர, உளமாற ரங்கநாதனை வணங்கினாலே போதும். அவர் லட்சுமியோடு வருவார். அவளது பார்வை பட்டால் இப்பிறவிக்கு மட்டுமல்ல, எத்தனை பிறவி எடுத்தாலும் கோடி கோடியாய் பொருள் சேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !