உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 24 ஏகாதசி விரதங்கள்

24 ஏகாதசி விரதங்கள்

மாதந்தோறும் ஏகாதசியன்று விரதம் இருந்து மறுநாள் துவாதசியன்று காலையில், திருமாலை தரிசிப்பதால் கிடைக்கும்  பலன்கள்.

மாதம்: சித்திரை    
ஏகாதசி: காமதா (வளர்பிறை)    பாபமோகினி (தேய்பிறை)
பலன்: நினைத்தது நடக்கும்.விரும்பியது கிடைக்கும்.

மாதம்:  வைகாசி
ஏகாதசி: மோகினி (வளர்பிறை) வருதித் (தேய்பிறை)    
பலன்: புண்ணிய நதிகளில் நீராடிய பலன். பத்ரிநாத் தரிசன பலன்.

ஆனி    
ஏகாதசி: நிர்ஜலா (வளர்பிறை) அபார (தேய்பிறை)
பலன்: மனச்சுமை நீங்கும். சொர்க்கம் கிடைக்கும்.

ஆடி    
ஏகாதசி: தேவசயனி (வளர்பிறை)யோகினி (தேய்பிறை)
பலன்: பாற்கடல் சென்ற பலன். லட்சம் பேருக்கு அன்னதானம் செய்த பலன்.

ஆவணி    
ஏகாதசி: புத்ரஜா (வளர்பிறை) காமிகா (தேய்பிறை)
பலன்: அழகான குழந்தை பிறக்கும். குழந்தை பெறுவதற்கான தடை நீங்கும்.

புரட்டாசி    
ஏகாதசி: பரிவர்தீனி (வளர்பிறை) அஜா (தேய்பிறை)
பலன்: குடும்ப ஒற்றுமை. பிரிந்த கணவன், மனைவி சேருதல்.

ஐப்பசி    
ஏகாதசி: பராங்குசா (வளர்பிறை) இந்திரா (தேய்பிறை)
பலன்: வறுமை, நோய் நீங்குதல். மன நிம்மதி கிடைக்கும்.

கார்த்திகை    
ஏகாதசி: பிரபோதின (வளர்பிறை) கைசிக (தேய்பிறை)
பலன்: 21 பேருக்கு தானம் செய்த பலன். தீர்க்க சுமங்கலி பாக்கியம்.

மார்கழி
ஏகாதசி: வைகுண்ட (வளர்பிறை) உத்பத்தி (தேய்பிறை)
பலன்: சொர்க்கம் கிடைத்தல். திருமண தடை நீங்குதல்.

தை
ஏகாதசி: புத்ரதா (வளர்பிறை) சுபலா (தேய்பிறை)
பலன்: ஆண் குழந்தை பாக்கியம். ஒளிமயமான வாழ்வு.

மாசி    
ஏகாதசி: ஜயா (வளர்பிறை)  ஷட்திலா (தேய்பிறை)    
பலன்: முன்னோருக்கு முக்தி.  முன்னோர் சாபம் நீங்குதல்.

பங்குனி
ஏகாதசி: ஆமலகி (வளர்பிறை) விஜயா (தேய்பிறை)
பலன்: ஆயிரம் பசுக்கள் தானம் செய்த பலன். நடக்காததும் நடத்தல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !