ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் தேர் பவனி!
ADDED :5418 days ago
புதுச்சேரி : ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடந்தது. புதுச்சேரி சக்தி நகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 9ம் ஆண்டு பெருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு நடந்த தேர்பவனியை ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக நடந்த தேர்பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.