உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நூற்றாண்டு பிரசித்தி பெற்ற கதை: அண்ணமார் சுவாமி உடுக்கையடி நிகழ்வு

நூற்றாண்டு பிரசித்தி பெற்ற கதை: அண்ணமார் சுவாமி உடுக்கையடி நிகழ்வு

பெருந்துறை: அண்ணமார் சுவாமி, உடுக்கையடி பாடல் நிகழ்ச்சி, பெருந்துறையில் நடந்து வருகிறது. பெருந்துறை, சென்னிமலை ரோட்டில் உள்ள தனியார் அரங்கில், அண்ணமார் சுவாமி கதை, உடுக்கையடி பாடல் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் தொடங்கியது. அண்ணமார் சுவாமி கதை, குன்னுடையான் கதை என அழைக்கப்படும் பொன்னர் சங்கர் கதை, கொங்கு நாட்டு மக்களிடையே, பல நூறு ஆண்டுகளாகப் பிரசித்தி பெற்று விளங்கும் கதையாகும். இதை, திருப்பூர் மாவட்டம், கண்டியன் கோவிலைச் சேர்ந்த சிவசக்தி கலைக்குழுவினர், உடுக்கையடி பாடலாக படித்து வருகின்றனர். குன்னுடையான், தாமரை பிறப்பு முதல், பொன்னர் சங்கர் படுகளம் காண்பது வரை, மூன்று தலைமுறை கதை, 40 நாட்களுக்கு பாடலாக படிக்கப்படும். தினந்தோறும் இரவு, 8:00 மணிமுதல், 11:00 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் நடிப்பவர்கள், 40 நாட்களும் விரதம் இருப்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இதனால் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !